Vazhga Valamudan | Success completion and Final Year student of M.A., M.Sc., in Yoga are now eligiable to attent the UGC NET Exam and JRF( Junior Research Fellow).

வாழ்க்கை மலர்கள்: ஜனவரி 3 - கடவுள் வணக்கம்

“எல்லாம் வல்ல பரம்பொருள் (Providence) எனக்கு வேண்டியதை எல்லாம் உரிய காலத்தில் கிடைக்குமாறு வைத்திருக்கும்பொழுது அந்தப் பரம்பொருள் இந்த இயற்கையாக, பிரபஞ்சமாக, உலகமாக, மக்களாக, எனக்கு உரியவர்களாக, என்னுடய அறிவாக இருந்து கொண்டு எல்லாவற்றையும் அளித்துக் கொண்டே இருக்கிறபோது நான் எதற்காக இது இல்லை, அது இல்லை என்று குறைபட்டுக் கொள்ள வேண்டும்; பிச்சை எடுக்க வேண்டும்? செய்ய வேண்டியதை மனம் கோணாமல் செய்துவிட்டு கவலைப்படாமல், பிறரை நொந்து கொள்ளாமல் இரு. உனக்கு முரண்பட்டவர்கள் யாரேனும் இருப்பின் அவர்களை வாழ்த்திக் கொண்டே இரு. உன்னை வாழ்த்திக் கொள். உன் குடும்பத்தை வாழ்த்து. சுற்றத்தாரை வாழ்த்து, சமுதாயத்தை வாழ்த்து.

மன அமைதியைப் பேணும் வகையில் தியானம், சிந்தனை, அகத்தாய்வு இவற்றில் தொடர்ந்து ஈடுபடு. உடற்பயிற்சியை நன்கு செய்து வா. இவ்வாறு தொடர்ந்து ஒட்டு மொத்தமான வாழ்க்கைப் பயிற்சியைக் கைக் கொண்டால் வேறு எந்த ஞானமும் வேண்டாம். இன்னும் ஒரு கடவுளும் வேண்டாம்.

ஏனென்றால், எந்தச் செயல் செய்தாலும் அங்கே விளைவு கடவுள் செயல் தான் (That is the cause and effect system). அது இயற்கையினுடைய விளைவு தான். நீ செய்யும் செயலுக்குத் தக்கவாறு உனக்கு இன்பமோ, துன்பமோ, வெகுமதியாகவும், தண்டனையாகவும் கொடுத்துக் கொண்டே இருப்பது எதுவோ அதுதான் எல்லாம் வல்ல இறை. ஆகவே, அந்த இறைவனை உன்னுடைய செயலின் விளைவாகக் காலையிலிருந்து மாலை வரையில் பார்த்து மதிப்புக் கொடுத்து வா. அதுவே கடவுள் வணக்கம். அதைவிட்டுத் தனியாக ஒரு கடவுளைத் தேட வேண்டாம்.
www.vethathiriyam.com
- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி

Trending Now

Vethathiriyam Andriod App

Get it on Google Play
Get it on Google Play