கருத்தரித்த நாள் முதற்கொண்டு ஒன்பது மாதம் பத்து நாள் வரையில் ஒரு தாய்க்கு என்ன துன்பம் இருக்கும் என்று யாராலும் எண்ணிப் பார்த்ததால் அதை விடத் துன்பம் உலகத்தில் மனிதனுக்கு இருக்க முடியாது. எல்லையற்ற பெருவெளியாகி மெய்ப்பொருள் தன்னில் உள்ளமைந்துள்ள ஆற்றலால் நுண்ணியக்க மூலக்கூறாகிய ஆகாசமெனும் சக்தியாகி, சிவம் சக்தி இரண்டின் கூட்டுச் சேர்க்கையில், விகிதாச்சார அமைப்புக்கேற்ப அணு முதல் அண்டகோடிகளாக விளங்குவதைச் சிந்தனையாற்றல் பெற்ற அனைவரும் அறிவோம்.
பேரியக்க மண்டலமெனும் பிரபஞ்சத்தின் ஆக்கம், நிகழ்வு, முடிவு எனும் மூன்றும் அணுக்கள் கூடுதல், இயங்குதல், பிரிதல் எனும் நிகழ்ச்சிகளேயாகும். எனினும், உயிரினங்கள், தோற்றங்கள், காப்பு இவற்றைப் பெண்மையினிடத்தே அருட்பேராற்றல் அமைத்திருக்கும், ஒப்புவித்திருக்கும் பேருண்மையை உணரும்போது எல்லோரும் பெண்ணினத்தின் பெருமையை உணர்ந்து போற்ற வேண்டியுள்ளது.
www.vethathiriyam.com
- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி