Vazhga Valamudan | Success completion and Final Year student of M.A., M.Sc., in Yoga are now eligiable to attent the UGC NET Exam and JRF( Junior Research Fellow).

வாழ்க்கை மலர்கள்: டிசம்பர் 30 - பேரறிவு

இருப்புநிலை, சூன்யம், ஒன்றுமில்லாதது என்று பலரும் எண்ணுகின்றனர். இது தவறானது. இருப்பு நிலை எல்லாவற்றையும் தன்னுள் பெற்றுள்ளது. அனைத்துப் பொருள்களும் இங்கிருந்து தான் ஆரம்பிக்கின்றன. இதனுள் இயங்குகின்றன. இருப்பு நிலையை கடல் என்று நாம் எண்ணினால் பிரபஞ்சத்தில் உள்ள மிகச் சிறிய பொருள்களிலிருந்து மிகப் பெரிய பொருள் வரை அதன் இயக்கங்கள், சக்திகள் அனைத்தும் கடலில் தோன்றுகின்ற அலைகளாகும். அலைகள் கடலில் தோன்றி, கடலின் மேல் அசைந்து, கடலில் முடிவடைகின்றன.

அதே போன்று மிகச் சிறிய பொருளிலிருந்து மிகப் பெரிய சூரியன் வரை உள்ள அனைத்துப் பொருள்களும், உயிர்வாழும் ஜீவன்களும் இருப்பு நிலையிலிருந்து (Static State) தோன்றி, அதனுள் இயங்கி, அதனுள்ளே முடிவடைகின்றன. நீக்கமற நிறைந்துள்ள பூரணத்தில், பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் இருப்பு நிலையில் மிதக்கின்றன. அசைகின்றன. தண்ணீரில் அதன் நுரை மிக நன்றாகத் தெரியும். நீரில் நுரை மிதப்பதைப் போன்று அனைத்துப் பொருள்களும் பூரணத்தில் மிதந்து கொண்டு உள்ளன. எண்ணிப் பாருங்கள்.

ஒரு பொருள், அதன் மேல் மற்றொரு பொருள் இதில் எது சக்தி வாய்ந்தது? அசைகின்ற ஒவ்வொரு பொருளையும், தன்னிடம் பிடித்துக் கொண்டிருப்பது இறைநிலை. பிரபஞ்சம் முழுதும் பூரணத்தில் அடங்கியுள்ளது. பூரணத்தில் மிதந்து கொண்டும், இயங்கிக் கொண்டும் இருக்கிறது. சுற்றிலும் சூழ்ந்துள்ள இருப்பு நிலையின் அழுத்தத்தால் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு துகளும் தற்சுழற்சி வேகத்துடன் இயங்கிக்கொண்டுள்ளது. பொருள்களின் தன்மைக்கேற்ப பிரபஞ்சம் முழுதும் வெவ்வேறு வேகத்துடன் இயங்கிக் கொண்டுள்ளது. இருப்பு நிலையே எல்லாம் வல்லது, அதுவே ஆதிநிலை.
www.vethathiriyam.com
*- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி*
  

Trending Now

Vethathiriyam Andriod App

Get it on Google Play
Get it on Google Play